• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

30க்கு மேற்பட்டோர் அ.திமுகவில் இணைந்தனர்..,

ByS. SRIDHAR

Jun 7, 2025

மாற்று கட்சியிலிருந்து விலகி புரட்சித்தமிழர் எடப்பாடியார் தலைமை ஏற்று முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் 30க்கு மேற்பட்டோர் அண்ணாதிமுகவில் இணைந்தனர்.

புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தங்க குபேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் பேரில் அமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சியிலிருந்து 30க்கு மேற்பட்டோர் விலகி அண்ணா திமுகவில் இணைந்தனர்.

புதிதாக இணைந்த அனைவரையும் வேட்டி அணிவித்து முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் வரவேற்றார், அமுமுக கறம்பக்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ்குமார், ஆறுமுகம், ரமேஷ் பன்னீர், முருகேசன், தானீஸ்லாஸ், பாஸ்கரன், பழனிவேல், ராஜசேகர், தமிழரசன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 30 க்கு மேற்பட்டோர் அண்ணா திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் கருப்பையா, கறம்பக்குடி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் முத்துக்குமார் , திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.