• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

அதிமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

ஆலங்குளம் வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.


தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் பாலபத்ராமபுரம் அதிமுக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அப்போது ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் வீராணம் சேக் முகம்மது, ஒன்றிய செயலாளர் வெற்றி விஜயன், மாவட்ட கவுன்சிலர் முத்துலெட்சுமி, மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.