• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிவகிரியில் தொடர்ந்து நடைபெறும் பணத் திருட்டு!..

Byமதி

Oct 24, 2021

சிவகிரி பிரதான சாலை பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார் 42 வயதான கிருஷ்ணசாமி. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று காலை திரும்பியபோது கடையில் உள்ளிருக்கும் டிராவை அதிலிருந்து 2000 ரூபாய் பணத்தை மர்ம திருடிச் சென்றது தெரியவந்தது.

பணம் திருடிய நபர் கடையின் பின்பக்க சுவர் வழியாக கடையினுள் நுழைந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் மர்ம நபரை தேடி வருகிறார்.

சிவகிரி பகுதியில் இரண்டு மாத காலமாக பணம் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர் எனவே இந்த விஷயத்தில் காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.