• Sun. Jun 4th, 2023

ஆராட்டு படத்தில் இளமைக்கு திரும்பிய மோகன்லால்

மோகன்லால் நடித்த வில்லன், மிஸ்டர் பிராடு உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கியவர் அவரது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன். தற்போது மோகன்லாலுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி சேர்ந்து ஆராட்டு என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்க, கேஜிஎப் புகழ் ராமச்சந்திர ராஜூ இதில் வில்லனாக நடித்துள்ளார் சில தினங்களுக்கு முன்பு இந்தப்படத்தின் டிரைலர் வெளியானது.ஆச்சர்யப்படும் விதமாக இந்த டிரைலரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் ஒரு காட்சியில் தோன்றியுள்ளார். நான் கேங்ஸ்டரும் அல்ல.. மான்ஸ்டரும் அல்ல.. சினிஸ்டர் என மோகன்லாலின் வசனமே மாஸாக இருக்கிறது. ரசிகர்களை இன்னும் இடையில் கொஞ்ச நாட்கள் மோகன்லாலின் படங்களில் விடுபட்டுப்போன கமர்ஷியல் அம்சங்களை எல்லாம் இந்தப்படத்தில் நிச்சயமாக எதிர்பார்க்கலாம் என்றே டிரைலர் உணர்த்துகிறது அதற்கேற்றபடி மோகன்லாலுக்கு புலிமுருகன் என்ற வெற்றி படத்தை கொடுத்த கதாசிரியர் உதயகிருஷ்ணா தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். குறிப்பாக எண்பதுகளில் ஸ்படிகம், நரசிம்மம் ஆகிய படங்களில் பார்த்த அதே மோகன்லாலை மீண்டும் பார்ப்பது போல இருக்கிறது.வெளியான ஒரே நாளில் இதுவரை 2.5 மில்லியன் பேர் இந்த டிரைலரை பார்த்து ரசித்துள்ளனர். சமீப காலமாக மோகன்லாலின் படங்கள் பெரும்பாலும் ஒடிடியில் வெளியாகி வந்த நிலையில் இந்தப்படம் தியேட்டர்களில் தான் ரிலீஸாக இருக்கிறது என்பதையும் டிரைலரிலேயே அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *