• Wed. Dec 11th, 2024

இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ள பிரபல இயக்குநர்!

பிசாசு உள்ளிட்ட படங்களின் மூலம் சிறப்பாக இயக்குநராக அறியப்படுபவர் இயக்குநர் மிஷ்கின். இவர் தற்போது ஆன்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இசையமைப்பாளராகவும் இவர் அறிமுகமாகவுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய மாறுப்பட்ட கதைக்களங்களின் மூலம் சிறப்பான இயக்குநராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். பிசாசு, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். தொடர்ந்து தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ஆன்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள படம் பிசாசு 2. இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி வெகுவான வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிசாசு படம் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படம் ரிலீசாக உள்ள நிலையில், அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

தன்னுடைய படங்களில் பாடல்கள் மற்றும் இசையமைப்பை சிறப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்பவர் மிஷ்கின். பிசாசு படத்தில் நதிபோகும் கூழாங்கல் பயணம் பாடலும் இசையமைப்பும் இதற்கு எடுத்துக்காட்டு!

இந்நிலையில் தன்னுடைய இசைஞானத்தை படத்திலும் கொண்டுவரும் வகையில் விரைவில் இசையமைப்பாளராக உருவெடுக்க உள்ளார் மிஷ்கின். தன்னுடைய தம்பி ஜி.ஆர்.ஆதித்யா இயக்கும் புதிய படத்திற்கு இவர் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தன்னுடைய மாறுபட்ட கதைக்களங்களின்மூலம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளான மிஷ்கின் தற்போது இசையமைப்பின்மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார் என்பது அவரது ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான செய்தியாக பார்க்கப்படுகிறது.