காரியாபட்டி ஜூன் 10 இந்தியாவில் மீண்டும் பாரத பிரதமராக மோடி பதவி ஏற்றுள்ளார் இதையொட்டி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நகரில் பாஜகவினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார் கூட்டுறவு பிரிவு செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார் . மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் மணிகண்டன் ஒன்றிய பொதுச் செயலாளர் கணேசன், நந்தா செல்வகுமார் வேடன் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

