• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ரஷியா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எந்தப் பக்கம்?- பிரதமர் மோடி விளக்கம்

ByP.Kavitha Kumar

Feb 14, 2025

ரஷியா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அரசு முறை பயணமாக அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேசினார். அப்போது, ரஷியா- உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இருக்கவில்லை என்று உறுதியாக தெரிவித்தார். மேலும், இந்தியா அமைதியின் பக்கம் நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இது குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ” ரஷியா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. அது அமைதியின் பக்கம் நிற்கிறது. இது போரின் சகாப்தம் அல்ல என்று நான் ஏற்கெனவே அதிபர் புதினிடம் கூறியுள்ளேன். ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொணடு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்த முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன்” என்று கூறினார். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் அதிபர் டிரம்ப் தனித்தனியாக தொலைபேசியில் பேசியிருந்தார். இதன் பிறகு பிரதமர் மோடி இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதில் இருந்து, 2022 உக்ரைன் படையெடுப்பு குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் உரையாடி வருகிறேன். மேலும் அமைதி பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் ஒரு பகுதியாக இருக்கும் என்றும், ரஷிய அதிபர் புதின் “சமாதானத்தை விரும்புகிறார் என்று தான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்தார்.