தமிழகத்தின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவை நியமன எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதாக பிரதமர் மோடி அறிவிப்பு.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. அவரது பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் நிறைந்துள்ளது. அவரது பாடல்கள் முலம் உலக முழவதும் உள்ள தமிழர்களை கவர்ந்தவர்.
இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பியாக இசையமைப்பாளர் இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பியாக நியமிக்கப்பட்டதை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மேலும் தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர் இளையராஜா எளிய பின்னணியில் இருந்து உயர்ந்த சாதனைகளை செய்தவர் என்று குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ஒரு புத்தக வெளியிட்டுவிழா நிகழ்ச்சியில் மோடியை சட்டமேதை அம்பேத்காருக்கு இணையாக புகழ்ந்து பேசிய போதே இளையராஜாவுக்கு எம்.பி பதவி கிடைக்கும் என பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோடியை புகழ்ந்ததால் இளையராஜாவுக்கு எம்.பி பதவி!!
