தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெட்ரோவும் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. முக்கியமாக தலைநகர் சென்னையில் தினசரி பாதிப்புகள் ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இந்நிலையில் சென்னை முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், பின்பற்றாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.