• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை

Byகாயத்ரி

Dec 17, 2021

வடகிழக்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ள வானிலை மையம், அங்கு அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனிடையே, தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம். இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.