• Fri. Apr 26th, 2024

யார் விலகினாலும் சரி அதிமுக பாஜக கூட்டணி தொடரும்- அண்ணாமலை

Byகாயத்ரி

Dec 17, 2021

நாமக்கல்லில் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தப்போது, மாநில அரசு கடந்த ஆறு மாத காலத்தில் என்ன புதிய திட்டத்தை மக்களுக்காக செய்தது. தமிழகத்தை பொறுத்தவரை மோடி அரசின் திட்டத்தை காப்பியடித்து மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மாநில அரசு சுயமாக எந்த ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்துவது இல்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு தினசரி நடைபெறும் கொலை சம்பவங்களே முன்னுதாரணம். தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியதே தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழக்காக உள்ளது. 1994-ல் கள்ளச்சாராயம் காய்ச்சி கைதாகி குண்டாஸில் சிறையில் இருந்த அமைச்சர் காந்தி என்னை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது.கோமாரி நோய் தடுப்பூசி மத்திய அரசு தரவில்லை என மாநில அமைச்சர் கூறுவது பொய். அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான கோமாரி நோய் தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பி உள்ளது என்றார். மேலும், அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை, அதிமுகவும் பாஜகவும் ஒரே நேர்கோட்டுப் பாதையில் செல்கிறது. அதிமுக, பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிப்பதாகவும், கூட்டணியிலிருந்து யார் விலகினாலும் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் எனக் கூறினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக உள்ளாட்சித் தேர்தலில் வெளியேறியது. பாமகவின் அண்புமணி உள்ளிட்டோர் அதிமுக குறித்தும் அதிமுக தலைமை குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *