• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பள்ளிகளில் தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கிய எம்.எல்.ஏ. ரூபி ஆர்.மனோகரன்..,

ByKGR Rakshana

Dec 5, 2023

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் நாங்குநேரி ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ.,அவர்கள் 05-12-2023 இன்று களக்காடு ஒன்றியம் களக்காடு நகராட்சி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு களக்காடு பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு களக்காடு கோமதி அருள்நெறி மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, க.அ.மொ.பீ.மீரான்யா மேல்நிலைப்பள்ளி, இடையன்குளம் அமீர்ஜமால் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் V.N.K.அழகியநம்பி, களக்காடு நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர், செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு, பாளை தெற்கு, வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் அலெக்ஸ், நளன் மாநில மகிளா காங்கிரஸ் இணை செயலாளர் கமலா பஞ்சாயத்து தலைவர் முத்துராமலிங்கம், இளைஞர் காங்கிரஸ் விபின், கவுன்சிலர்கள் சிம்சோன்துரை, மிகா, மகளிரணி நிர்வாகிகள் பானு, ஸ்ரீதேவி மாவட்ட பொதுச்செயலாளர் நம்பிதுரை, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்ஃபோர்டு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.