

உசிலம்பட்டியில் ரூ.27 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை எம்எல்ஏ அய்யப்பன் திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள ஆர். சி.சிறுமலர் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர பள்ளி நிர்வாகம், பள்ளி குழந்தைகள் வைத்த கோரிக்கையை ஏற்று தேனி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒ.பி. ரவீந்திரநாத் கீழ் பரிந்துரையில் ரூ27லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற உசிலம்பட்டி எம்எல்ஏ பி.அய்யப்பன் புதிய வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இதில் ஆர்சி பள்ளிகளின் எஜுகேஷன் கவுன்சிலர் சகோதரி புஷ்பா, துவக்கப்பள்ளி தாளாளர் மரியணிபானு, தலைமை ஆசிரியர் சகாய மரிய இரச்சியம், சகோதரி சூசையம்மாள், தாளாளர் ரோஜாமணி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மெர்சி, இயேசுபவன் சகோதரிகள் அமலி, தங்கம், லூசியா, புனிதா மற்றும் நகராட்சி ஆணையர் சக்திவேல் மற்றும் நகராட்சி பொறியாளர் பட்டுராஜன், ஓபிஸ் அணி மாவட்ட நிர்வாகி பிரபு, முன்னாள் எம்எல்ஏ பாண்டியம்மாள், நகர நிர்வாகிகள் சசிக்குமார், அழகுமாரி, ஜெயவீரன்,ஆவின்சௌந்திரபாண்டி, ஒன்றிய நிர்வாகிகள் ஜான்சன், கோஸ்மீன்,வேங்கைமார்பன், பிரேம்குமார், வெங்கடேஷ், மல்லப்புரம் மனோஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் பல கலந்து கொண்டனர்.
மேலும் உசிலம்பட்டி எம்எல்ஏ வுக்கு பள்ளி மாணவிகள் நன்றியை தெரிவித்தனர்.


