

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சேமிக்கும் குப்பைகளை டிராக்டர் லாரி மற்றும் வேன் மூலமாக சேமித்து மதுரை வெள்ளக்கல்லுக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் கொண்டு செல்லும் வாகனங்கள் முறைப்படி குப்பைகளை மூடி செல்லாமல் சாலைகள் முழுவதும் சிந்தி செல்வதால் சாலை முழுவதுமே குப்பை கூடமாக ஓரிடத்தில் சேமிக்கப்படும் குப்பைகள், குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லும் வழியில் சாலை முழுவதும் குப்பைகளை சிதறவிட்டு, பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மேலே குப்பைகள் சிதறி சாலை முழுவதுமே குப்பையாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகிறார்கள். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகளும் உள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகவே உள்ளது.



