• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சீர்காழியில் முக்கிய வீதிகளில் நடைப்பயணம் மேற்கொண்ட மு க ஸ்டாலின்..,

ByM.JEEVANANTHAM

Apr 7, 2026

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக இன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

நேற்று பாண்டிச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் இரவு திருவெண்காட்டில் உள்ள துர்க்கா ஸ்டாலின் இல்லத்தில் தங்கினார். பின்னர் காலை சீர்காழி உழவர் சந்தை புதிய பேருந்து நிலையம் மருத்துவமனை ரோடு மணிகூண்டுரோடு பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நடைபயிற்சி மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது உழவர் சந்தையில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிகள் முதல்வருக்கு ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்களோடு கலந்துரையாடினார்.

அரசு மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள ஒரு தேநீர் கடையில் வேட்பாளருடன் அமர்ந்து தேனீர் அருந்தினார். பழைய பேருந்து நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்களில் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்த பின்னர் நடைப்பயிற்சி நிறைவடைந்து திருவெல்காடு சென்றார்.

நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.