• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

பிப்.8ல் யுபிஐ சேவை இயங்காது என அறிவிப்பு

Byவிஷா

Feb 6, 2025

பிப்ரவரி 8 ஆம் தேதியன்று, கணினி பராமரிப்பு காரணமாக ஒருங்கிணைந்த கட்டண இடை முகம் சேவை (யுபிஐ) சில மணி நேரங்களுக்கு இயங்காது என ஹெச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் கட்டணங்கள் அதிகரித்து வரும் நிலையில், இன்று, கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ கட்டண முறையை பயன்படுத்துகின்றனர். சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையிலேயே பெரும்பாலான மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். ஆனால் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று யுபிஐ குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது.
கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் மூன்று மணி நேரத்திற்கு யுபிஐ ஐப் பயன்படுத்த முடியாது. அதாவது யுபிஐ மூலம் யாருக்கும் பணம் அனுப்ப முடியாது. நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கணினி பராமரிப்பு காரணமாக, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) சேவை பிப்ரவரி 8, 2025 அன்று சில மணிநேரங்களுக்கு வேலை செய்யாது என்று ர்னுகுஊ வங்கி தெரிவித்துள்ளது. பிப்ரவரி 8 அன்று அதிகாலை 12:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை யுபிஐ சேவைகள் வேலை செய்யாது என்று வங்கி தெரிவித்துள்ளது, அதாவது, இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் யுபிஐ செயலியில் இருந்து யாருக்கும் பணம் அனுப்ப முடியாது.
இந்த செயலிழப்பு காலங்களில், ஹெச்டிஎப்சி வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் மற்றும் சுரீயல கிரெடிட் கார்டு மூலம் நிதி மற்றும் நிதி அல்லாத யுபிஐ பரிவர்த்தனைகள் கிடைக்காது என்று ஹெச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.
யுபிஐ என்பது எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் உடனடியாகப் பணத்தை அனுப்பக்கூடிய ஒரு அமைப்பாகும். இது இந்திய தேசிய கட்டணக் கழகத்தால் உருவாக்கப்பட்டது. ருPஐ உதவியுடன், மொபைல் பயன்பாடுகள் மூலம் பணத்தை மாற்றலாம். யுபிஐ கட்டண முறையில், கூகுள் பே, போன் பே அல்லது பேடிஎம் போன்ற பயன்பாடுகளைப் பயன்படுத்தி மொபைல் சாதனம் மூலம் இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடியாக பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. யுபிஐ மூலம் பணம் அனுப்ப ஐபிஎஸ் குறியீடும் தேவையில்லை. இதற்கு, நீங்கள் யுபிஐ ஐடியை அறிந்திருந்தால் போதும்.