மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருக்கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கிய நிலையில், அனைத்து திருக்கோயில்களிலும் பக்தர்கள் பிராத்தனை வேண்டி தங்கரதம் இழுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதையொட்டி நேற்று மாலை அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் தங்கரத புறப்பாட்டை துவக்கி வைத்தார் இந்து அறநிலைதுறை அமைச்சர் சேகர்பாபு. இந்த நிகழ்வில் அவர்களுடன் இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் திரு.குமரகுருபரன், இணை ஆணையர் திருமதி.காவேரி பங்கேற்றனர்.