தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஆறாவது மெகா தடுப்பூசி போடும் முகாமிற்கு மேளதாளம் கரகாட்ட துடன் வீடுகள் தோறும் சென்று அழைப்பு விடுத்த ஊராட்சி மன்ற தலைவர்.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 சதவீகித கொரோனா தடுப்பூசி போடும் விதமாக தமிழக அரசு தொடர்ந்து தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்காக நடைபெறும் ஆறாம் கட்ட தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்களை வரவழைப்பதற்காக ஊராட்சி மன்ற நிர்வாகம் மேளதாளத்துடன் கரகாட்டம் ஆடி தெருக்கள் தோறும் சென்று தடுப்பூசி போடாத பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ் அழைப்பு விடுத்தார்.

மேலும் வீடுகள் தோறும் இன்று நடைபெறும் தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன் மற்றும் சேது குமார் ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், ஊராட்சியில் 100 சதவீத குழந்தை தடுப்பூசி போடும் பணிகளை நடத்தி முடிக்கவும் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள கரகாட்டம் மற்றும் இசைக் கலைஞர்களுக்கு வாழ்வளிக்கும் விதமாகவும், அவர்களுக்கு வருவாய் ஈட்டும் இதமாகவும் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி வருவதாக தெரிவித்தார்.