• Thu. Apr 18th, 2024

அதிமுக செய்த சாதனைகளை பட்டியலிட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற 70 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியது அதிமுக அரசுதான். எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது 355 கோடியில் ரூபாய் விருதுநகரில் மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளோம். விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடத்துக்கு நான்தான் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தேன். தற்போது அந்தப் பணிகள் முடிவடைந்து உள்ளது. தனியார் மருத்துவமனைக்கு இணையாக இன்றைக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையை நாங்கள் உருவாக்கி கொடுத்துள்ளோம். அதற்கு காரணம் அதிமுகவின் சிறப்பான ஆட்சிதான். இப்படி எத்தனை திட்டங்கள் நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

விருதுநகர் நகராட்சி, அருப்புக்கோட்டை நகராட்சி, சாத்தூர் நகராட்சிக்கு 446 கோடி ரூபாயில் தனியாக ஒரு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். விருதுநகரில் பாதாளசாக்கடை திட்டம் அண்ணா திமுக ஆட்சியில் தான் சிறப்பாக முடிக்கப்பட்டது. விருதுநகர் நகர் முழுவதும் தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள் புதிதாக அமைத்து கொடுத்துள்ளோம். விருதுநகரில் 2011 க்கு முன்பு இருந்த சாலைகளையும் பாருங்கள் 2011க்கு பின்பு உள்ள 2021வரை உள்ள சாலைகளையும் பாருங்கள். அந்த அளவிற்கு எல்லா சாலைகளையும் புதிதாக அமைத்து கொடுத்துள்ளோம்.

கொடிக்குளம் பகுதி மக்கள் வத்திராயிருப்பு பகுதி மக்கள் ஒரு பள்ளி சான்றிதழ் வாங்க கூட ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. அந்த நிலையை மாற்றி வத்ராப்பை தனி தாலுகா அலுவலகமாக மாற்றியது அதிமுக ஆட்சியில்தான். புதிய தாலுகா அலுவலகத்திற்கு கட்டிடத்திற்கு கட்டிடம் கட்ட பணம் ஒதுக்கிதும் அதிமுக ஆட்சியில்தான். வத்ராப் பகுதியில் குறுகிய சாலைகளில் எல்லாம் சிமெண்ட் சாலைகள் அமைத்து கொடுத்துக்ளோம். பெரிய சாலைகள் எல்லாம் தார் சாலைகள் அமைத்து கொடுத்துள்ளோம். மெயின் சாலையில் எல்லாம் அகலப்படுத்தியுள்ளோம். அதிமுக ஆட்சியில்தான் இங்கு ஆர்டிஓ அலுவலகம் கட்டப்பட்டது. இப்படி பல்வேறு திட்டங்களை வத்திராயிருப்பு பகுதிக்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

மம்சாபுரம் பேரூராட்சி, கொடிக்குளம் பேரூராட்சி, சுந்தரபாண்டியம் பேருராட்சி உட்பட 7 பேரூராட்சிகளிலும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு ஆகிய 3 ஒன்றிய பகுதிகளிலும் தாமிரபரணி தண்ணீர் கொடுத்தது அதிமுக ஆட்சியில் தான். புரட்சித்தலைவி அம்மாவிடம் நான் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து முக்கூடல் கூட்டுக்குடிநீர் திட்டம் இந்த பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளது. வத்ராப் பேரூராட்சியில் யார் சேர்மனாக வர வேண்டும் யார் ஆட்சி செய்ய வேண்டும் யார் கவுன்சிலராக வரவேண்டும் என்ற நல்ல முடிவை வாக்காள பெருமக்கள் நீங்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

2011 க்கு முன்பு வத்ராப் பகுதிகளில் சாலையில் எப்படி இருந்தது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். 2011 க்கு பிறகு கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்த சாலைகள் எப்படி இருக்கின்றது என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். அந்த அளவிற்கு அனைத்து சாலைகளையும் புதிதாக போட்டு கொடுத்துள்ளோம். அதிமுக ஆட்சி வத்ராப் பேரூராட்யில் அமைய வேண்டும். ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்டால் தான் வேலை நடக்கும் என்று சில பேர் கூறுவார்கள். பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர் கவுன்சிலர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பினால் பணிகள் நடைபெறும்.

என்னைப் போன்றவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வழி நடத்துவோம். குடிக்க நல்ல தண்ணீர், சுகாதாரமான வாழ்க்கை, பெண்கள் சுகாதார வளாகம், தரமான சாலைகள், புதிய குடியிருப்புகள் உருவாக்குதல், புதிய வடிகால் கட்டுதல் புதிய சிமெண்ட் சாலை போடுதல் போன்ற திட்டங்கள் மூலம் அருமையான பேரூராட்சியாக இந்த பேரூராட்சியை நாங்கள் மாற்றி காண்பிப்போம்.

தைப்பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் அதிமுகவிற்கு மிகப்பெரிய ஆதரவான அலை நிலவுகின்றது. புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் எடப்பாடியார் முதல்வராக இருந்தபோது கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 வழங்கினோம். தாய் வீட்டு சீதனம் போன்று பொங்கல் பரிசு தொகுப்புகளை அண்ணா திமுக அரசு வழங்கியது. ஆனால் இந்த பொங்கலுக்கு மக்களுக்கு எதுவும் கொடுக்காததால் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வாக்காளர்கள் தயாராக உள்ளனர்.

எடப்பாடியார், ஓபிஎஸ் கரத்தை வலுப்படுத்த வாக்காளர்கள் தயாராக உள்ளனர். 2011-இல் புரட்சித்தலைவி அம்மாவிடம் நான் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் 8 புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அறிவித்தார். அதில் மூன்று கூட்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டது. முக்கூடல் கூட்டு குடிநீர் திட்டம், சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம், வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டம் என இந்த மூன்று கூட்டு குடிநீர் திட்டத்தை புரட்சித்தலைவி அம்மாவிடம் கேட்டு நான் வாங்கி கொடுத்துள்ளேன். அந்த உரிமையோடு உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.
அதிமுக ஆட்சியில்தான் சிவகாசியை மாநகராட்சியாக மாற்றி அமைக்கப்பட்டது.

மாநகராட்சிக்கு ரூ.5 கோடியில் புதிய கட்டிடமும் கட்டி கொடுக்கப்பட்டது. சிவகாசியில் 100 கோடி ரூபாய் அளவில் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.. என்னுடைய முயற்சியால் அதிமுக ஆட்சியில்தான் கொண்டா நகரம் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

சிவகாசியில் சுற்றுச் சாலை திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கிடு செய்தது எடப்பாடியார் தான்.. சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் பணிகள் தொடங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு பணிகளை தொடங்கி வைத்தவர் எடப்பாடியார்! போன ஆண்டு தை பொங்கலுக்கு பரிசு தொகுப்பு ரூபாய் 2500 வழங்கியது. அண்ணா திமுக அரசு. பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நிறைந்த இந்தப் பகுதியில் அதிமுக ஆட்சியில்தான் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. இந்த அரசுக் கல்லூரியில் 2500 ஏழை எளிய மாணவ, மாணவிகள் படிக்கும் அளவிற்கு இந்த கல்லூரியை நாங்கள் உருவாக்கி கொடுத்துள்ளோம். சிவகாசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டத்தை அண்ணா திமுக அரசு உருவாக்கிக் கொடுத்தது. அதன் பயனாக இன்று கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பட்டாசு தொழிலில் 8 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீப்பெட்டிக்கு 18 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை எங்களது முயற்சியால் 12 சதவீதமாக குறைத்துள்ளோம்! சிவகாசியில் பட்டாசு பயிற்சி மையத்தை உருவாக்கியது அம்மாவுடைய அரசாகும். பட்டாசு விபத்தின் போது பட்டாசு தொழிலை காப்பாற்றும் வகையில் சிவகாசியில் நவீன தீக்காய சிகிச்சை மையத்தை உருவாக்கியது கட்டிக் கொடுத்தது அண்ணா திமுக அரசாங்கம்தான். பட்டாசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கியதும் அண்ணா திமுக அரசுதான். பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்ட சிக்கல்களை தீர்வு காணும் வகையில் உச்சநீதிமன்றத்தில் அண்ணா திமுக அரசு தனி வழக்கறிஞரை நியமித்து வாதாடியது.
இதேபோன்று திருத்தங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தியது. திருத்தங்கலில் புதிய பஸ் ஸ்டாண்ட் உருவாக்கிக் கொடுத்தது அதிமுக ஆட்சியில்தான். சிவகாசி பஸ் ஸ்டாண்டு விரிவாக்கம் செய்து கொடுத்தது நான்தான்! சிவகாசியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் அளவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது அண்ணா திமுக அரசாங்கம். திருத்தங்கல் என்றாலே தண்ணீர் பிரச்சனை இருக்கும் அதனால் பெண் கொடுக்க தயங்குவார்கள் ஆனால் தற்போது அனைத்து பகுதியிலும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்துள்ளோம். அனைத்து வேட்பாளர்களும் பக்குவமாக ஓட்டு கேளுங்கள்! யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் அதிமுக சாதனைகளை மட்டுமே கூறி வாக்கு கேளுங்கள் என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *