

மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியை கண்டித்து மறியல் செய்ய தயாராகும் பொதுமக்கள்
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 21 மற்றும் 22 சிங்கம்புடாரி கோவில் ஒண்ணாவது மற்றும் இரண்டாவது தெருவில் பாதாள சாக்கடை நீர் முற்றிலுமாக வெளியேறி சுகாதார கேட்டின் உச்சமாக உள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை திட்டம் கட்டிய போது முறையான வடிகால் வசதி இல்லாமல் கழிவுநீர் அப்படியே தேங்கி நிற்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் இந்தப் பகுதியில் பெரியவர்கள் கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். கொசு தொல்லையால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மதுரை மாநகராட்சி ஆணையருக்கும் மண்டல நிர்வாகிக்கும் பல்வேறு முறை கோரிக்கை விடுத்தம் தற்காலிகமாக சரி செய்வதே அவர்களின் பணியாக உள்ளது. மழைக்காலங்களில் அதிகப்படியான கழிவுநீர் தேங்குவதால் முற்றிலும் கழிவுநீர் குடியிருப்புகள் வரும் சூழ்நிலை இந்த பகுதி மக்களுக்கு உருவாகியுள்ளது.

மேலும் மாநகராட்சிக்கு இது சம்பந்தமாக புகார் அனுப்பிய போது அந்த பகுதி சரி செய்யப்பட்டு விட்டது என்று தவறுதலாகவும் செய்திகள் அனுப்பப்படுவதாக இந்த பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையை கையில் வைத்துக் கொண்டு மிஸ்டர் கிளீன் அமைச்சர் என்று பெயர் பெற்று வரும் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவான பி டி ஆர் பழனிவேல்தியாக ராஜன் நேரடியாக கள ஆய்வு செய்து இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி சுகாதாரக் கேடு ஏற்படா வண்ணம் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர் மேலும் விரைவில் கழிவு நீர் கால்வாயை சரி செய்யாவிட்டால் பொதுமக்களை திரட்டி பஸ் மறியல் செய்யப் போவதாகவும் இந்த பகுதி மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
- கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர்களுக்கு விபத்து..,குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி … Read more
- ஒன்றிய, கர்நாடகா அரசுகளை கண்டித்து, நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்…குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்.நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள … Read more
- நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்…மதுரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.அந்த அரசன் சகல … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 261: அருளிலர் வாழி தோழி! மின்னு வசிபுஇருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடுவெஞ் … Read more
- குறள் 538:புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். பொருள் (மு.வ): சான்றோர் புகழ்ந்து சொல்லியச் … Read more
- பிஜேபியுடன் கூட்டணி முறிவு… அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்சசியை வெளிப்படுத்திய இஸ்லாமியர்கள்..,பி.ஜே.பியுடன் கூட்டணி முறித்துக் கொண்டதற்காக சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இஸ்லாமியர்கள் இனிப்பு ஊட்டி … Read more
- வாடிப்பட்டி அருகே மத்திய சிறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மறியல்..!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக சிறுமலை அடிவாரத்தில் உள்ள … Read more
- கழிவுநீரை அகற்ற லஞ்சம் கேட்ட மாநகரட்சி அதிகாரி கைது..!தொடர்ந்து இதுகுறித்து பொன்னகரம் வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர் விஜயகுமார் கணேசன் … Read more
- சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985)…சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் … Read more
- குளச்சல் படகு மூழ்கி மூன்று குமரி மீனவர்கள் மாயம்..!மீனவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆள் கடல் பகுதியில் 29. 9. 2023 அன்று மீன் … Read more
- விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருள் கண்காட்சி..!விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவின் உற்பத்திப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகிறதுவிழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி … Read more
- அக்.1 முதல் விருதுநகர் – தென்காசி இடையே மின்சார ரயிலில் பயணிக்கலாம்..!
- தொடர் விடுமுறையால் திருப்பதியில் அலைமோதிய கூட்டம்..!தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது.இதனால் வைகுந்தம் … Read more
