நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதும் ஐ.டி.அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் இரண்டு வருடங்கள் நிதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தற்போது தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆடியோ விவகாரம் தான் பீடிஆரின் துறை மாற்றத்திற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஐடி துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என்பதால் தான் தகவல் தொழில்நுட்பத் துறை பிடிஆர் வசம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் திறமையானவர் என்பதால் கண்டிப்பாக ஐடி துறையில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்று மேலிடம் கணக்கு போட்டு தான் அந்த துறையை அவரிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையில் அமைச்சராக பொறுப்பேற்றதும் அமைச்சர் பிடிஆர் அந்த துறை சார்ந்த சில முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்படி ஐடி துறை செயலாளர் குமரகுருபரன், டாக் டிவி ஜான் லூயிஸ், பாரத் நெட் கமல் கிஷோர், பிரவீன் நாயர் ஆகிய அதிகாரிகளை சந்தித்து பேசியதோடு அது தொடர்பான புகைப்படங்களையும் அமைச்சர் பீடிஆர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதோடு புரட்சிகரமான ஐடி துறையில் வரப்போகும் மகத்தான விஷயங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். எப்போதும் போல் ஒரு நல்ல பிரதிநிதியாக செயல்படுவேன் என்று பதிவிட்டுள்ளார்.