• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முதல் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி..,

ByKalamegam Viswanathan

Jan 8, 2026

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு மைதானத்தில் 2026 : இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மற்றும் தி ரைஸ் அமைப்பு சங்கம்.5 ஏற்பாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 750 காளைகள் மற்றும் 250 வீரர்கள் கலந்து கொண்டனர் .உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைக்கும் நோக்குடன் 2016ம் ஆண்டு ‘தி ரைஸ்’ துவங்கப்பட்டது. மதுரையில் முதல் மாநாடு நடந்தது. அதன் பிறகு பல்வேறு நாடுகளில் தி ரைஸ் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு நடத்தப்பட்டு, தற்போது 16வது மாநாடாக மீண்டும் மதுரையில் தி ரைஸ் சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது.

‘தி ரைஸ் – சங்கம் 5 : மா மதுரை 2026’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியுடன் கோலாகலமாகத் தொடங்கியது. அலங்காநல்லூர், அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. சங்கம் 5 மாநாட்டுக் குழு சார்பில் நடத்தப்படும் இந்த போட்டியை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தி ரைஸ் குளோபல் அமைப்பின் நிறுவனர் ஃபாதர் ஜெகத் கஸ்பர் ராஜ், தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கத்தின் தலைவர் ஜெகதீசன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவர் பி.ராஜ சேகரன், தி ரைஸ் ஜல்லிக்கட்டு பிரிவு பொதுச் செயலாளர் பாலகுரு, தி ரைஸ் அமைப்பின் தென்மண்டல இயக்குனர் பெரிஸ் மகேந்திரவேல், தி ரைஸ், மதுரை தலைவர் பதஞ்சலி சரவணன் மற்றும் உலகம் முழுவதிலும் 55 நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

தி ரைஸ் – சங்கம் 5 உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு ஜனவரி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 2000க்கும் மேற்பட்ட தமிழ் தொழிலதிபர்கள் மதுரை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.