கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை அதிகாரிகளுடம் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களுக்கு முன் தொடங்கிய கனமழை தொடர்ந்து நான்கு நாட்களாக கொட்டி தீர்த்தது இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வந்த நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டது. உபரி நீரால் ஆறு குளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து உடைப்புகள் ஏற்பட்டு குடியிருப்புகளில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியதோடு ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் உள்ள பயிர்களும் சேதமடைந்தது.

நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேத பகுதிகளை பார்வையிட வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சேத பகுதிகளை ஆய்வு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சி தலைவர் அரவிந்த் உட்பட அதிகாரிகள் வெள்ள சேத பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தலக்குளம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய குளத்தில் ஏற்பட்ட உடைப்பை ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் வெள்ள பாதிப்பில் சிக்கி குளச்சல் பகுதியில் உள்ள அரசு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.