• Sat. Apr 20th, 2024

 மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் வைத்த செக்!

By

Sep 3, 2021
ma-subramanian

தமிழகத்துக்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி ஒதுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்துள்ளார்.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு பாராட்டியது. இதனையடுத்து, தற்போதைய மாதத்திற்குள் 1.04 கோடி தடுப்பூசி தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாதத்துக்கு 2 கோடி தடுப்பூசி தமிழகத்தால் போட முடியும்.

மக்கள் தொகை அடிப்படையில் மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும். மேலும், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டுக்குள் அனுமதி போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளா எல்லையுடன் ஒட்டியுள்ள 9 மாவட்டங்களில் 100% தடுப்பூசி என்ற இலக்கோடு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, 2 கோடி கூடுதல் தடுப்பூசி உள்ளிட்ட 10 கோரிக்கையை வைத்துள்ளோம். தமிழகத்துக்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தவும் வலியுறுத்தினோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *