விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெரியார் நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள பொது வினியோக கடையினை வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
சாத்தூர் நகராட்சி வார்டு 1 பெரியார் நகரில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பொதுவிநியோக கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் தலைமையில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ரகுராமன் முன்னிலையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
