• Wed. Mar 19th, 2025

வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர்

திமுக அரசின் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி,அதனால் தான் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது-சாத்தூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் பேசினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் கலந்து கொண்டு சாத்தூர் மற்றும் வெம்பகோட்டையை சேர்ந்த 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்களை வழங்கினார்

.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதிற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சி இது என்றும் வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்காமல், அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டம் இந்த வளைகாப்பு திட்டமாகும் என்றார். சாதி மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள் என்றும் திமுக அரசின் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி,அதனால் தான் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது என்றார்.