

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாயில்பட்டி மற்றும் அன்பால் இணைவோம் அறக்கட்டளை, சிவகாசி இணைந்து பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் மருத்துவமனையில் குழந்தைத் தொட்டில் வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வட்டார மருத்துவ அலுவலர் செந்தட்டிக்காளை மற்றும் தாய் சேய் நல அலுவலர் பழனியம்மாள் தலைமை வகித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாந்தி, நித்யா மொபைல்ஸ் உரிமையாளர் மணி, சாந்ததீபன், கோடீஸ்வரி, ஜேசிஐ கோபால கிருஷ்ணன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேலும், அன்பால் இணைவோம் உறுப்பினர்கள் பாண்டீஸ்வரன், மாரிமுத்து, செல்வகணேஷ், எபினேஷ் மற்றும் பூவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை அன்பால் இணைவோம் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஏற்பாடு செய்தனர்.

