• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர்.

சாத்தூர் அருகே பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவாய் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

சாத்தூர் அருகில் உள்ள அப்பாயநாயக்கன்பட்டி மற்றும் மல்லைய நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தம் மற்றும் நியாய விலை கடைகள் ஆகியன கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு இன்று வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

அப்பையநாயக்கன்பட்டியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடையும் மல்லைய நாயக்கன்பட்டியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை ஆகியவற்றை வருவாய் துறை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அத்துடன் மழைய நாயக்கன்பட்டியில் தொடங்கி வைத்த ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களையும் அமைச்சரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய் துறை அலுவலர்மற்றும் அரசு அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.