• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

விடியா திமுகவின் அவல ஆட்சியை பட்டியலிட்டு துண்டு பிரசுரம் விநியோகம்

சாத்தூரில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் தலைமையில் விடியா திமுகவின் அவல ஆட்சியை பட்டியலிட்டு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.

சாத்தூர் பகுதியில் தமிழகத்தில் நடைபெற்று வரும் விடியா திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டு துண்டு பிரசுரங்களே விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகள் முக்கிய வீதிகள், வணிக வளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் துண்டு பிரச்சாரங்களை விநியோகித்தனர்.
திமுக அரசின் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டும் பால் மின் கட்டணம், சொத்து வரி. பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு உள்ளிட்ட விலை உயர்வுகளை பட்டியலிட்டும் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் நடைபெறும். மு.க ஸ்டாலின் பொம்மை ஆட்சியின் முகத்திரையை தோலுரிக்கும் வண்ணம் துண்டு பிரசுரங்களை அச்சடித்து சாத்தூர் மெயின் ரோடு, மார்க்கெட் வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் அதிமுக ஆட்சியை மீண்டும் மலர வைக்க வேண்டும் என்றும், அதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட செயலாளர் ஆர். கே. ரவிச்சந்திரன் மற்றும் நகரச் செயலாளர் கிருஷ்ணன் மேற்கு ஒன்றிய செயலாளர் சீதாராமன் மற்றும் சாத்தூர் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான பேரணியாக சென்று மேளதாளத்துடன் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.