புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கத்தின் சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் 1.16 லட்சம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள், இன்று 28/06/2026 போலியோ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. குழந்தைசாமி அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. காந்தி ராஜ் அவர்கள், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு. பிரகாஷ் அவர்கள், இணை இயக்குனர்( பொது சுகாதாரம் சென்னை) மரு. சதீஷ் ராகவன்,நகர் நல அலுவலர் மரு.காயத்ரி அவர்கள், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. ஹம் சந்த் காந்தி அவர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்( அறந்தாங்கி) மரு. விஜயகுமார் அவர்கள், துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி பிருந்தா, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அலுவலர்கள், பொதுமக்கள் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



