• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல்..,

ByS.Ariyanayagam

Jun 28, 2026

திண்டுக்கல் அருகே அய்யம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது – 488 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய DSP.வினோதினி உத்தரவின் பேரில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாயராஜலக்ஷ்மி தலைமையில் சார்பு ஆய்வாளர் ஆரோக்கிய ரோஜர்மில்டன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே பதுக்கி வைத்து சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த அய்யம்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் மகன் முத்துராஜ்(29) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 488 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.