• Sat. Apr 27th, 2024

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிறாவயல் மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார்…

ByKalamegam Viswanathan

Jan 18, 2024

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலையில், கொடியசைத்து
துவக்கி வைத்து தெரிவிக்கையில்..,
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவைகள் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு, அனைத்துக் கிராமப்புறப் பகுதிகளிலும் வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதில், குறிப்பாக, சிவகங்கை மாவட்டம், சிறாவயல் மஞ்சுவிரட்டு என்பது உலக அளவில் புகழ் பெற்றதாக திகழ்ந்து வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை எவ்வித இடையூறுன்றி சிறப்பாக தமிழகத்தில் நடத்திட, தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, வரலாற்று சிறப்பு மிக்க நமது சிவகங்கை மாவட்டத்தில், ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வரும்இ உலக புகழ் பெற்ற சிறாவயல்  மஞ்சுவிரட்டு, சிறாவயல் கிராமத்தில் இன்றையதினம்  சிறப்பாக நடைபெறுகிறது.
இம்மஞ்சுவிரட்டு விழாவில் பங்கேற்பதற்கென அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, பல்வேறுப் பகுதிகளிலிருந்து 272 காளைகளும், 81 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும்,இப்பணியில் 8 மருத்துவக் குழுக்களும், காவல் துறையைச் சார்ந்த சுமார் 1000 காவலர்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

 இவ்விழாவினை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வரும் சிறாவயல் மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பு குழுவினைச் சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இவ்விழாவில் பங்கு பெற்றுள்ளவர்கள் அரசால் வகுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்புடன் இருந்து விழாவை சிறப்பாக நடத்திடுவதற்கு ஒவ்வொருவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

முன்னதாக, சிறாவயல் மஞ்சுவிரட்டு விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தலைமையில், மாடுபிடி வீரர்கள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.க.அர்விந்த், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சோ.பால்துரை, மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதன், திருப்பத்தூர் வட்டாட்சியர் ஆனந்த் , சிறாவயல் ஜல்லிக்கட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி, உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *