• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகளில், தங்கம் வென்ற வாழைப்பழ வியாபாரியின் குழந்தைகள்

ByG.Suresh

Jan 18, 2024

ஸ்டூடண்ட் ஒலிம்பிக் அசோசியேசன் சார்பில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் ஆறு மாநிலங்களில் இருந்து ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் பங்குபெற்று விளையாடினார் கள் இதில் தமிழ்நாடு சார்பில் சிவகங்கை மாவட்டம் மலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காஞ்சி செல்வன், சத்யா தம்பதியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் காஞ்சி ரித்திக், எட்டாம் வகுப்பு படிக்கும் காஞ்சி லக்ஷிதா இருவரும் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் பெற்றனர். மேலும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற மற்ற வீரர்களையும் அவர்களது பெற்றோர்களையும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேரில் அழைத்து பாராட்டியது டன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.