பால் விலை அவ்வபோது உயர்ந்து வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அதிக சம்பளம் கேட்பதால் பால் விலை, பேருந்து கட்டணம் சிறிதளவு உயரலாம் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாக தகவல் வெளியாகியது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, பால் விலை, பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார். இந்த விலை உயர்வை நாங்கள் திணிக்கவில்லை. அந்தந்த காலக்கட்டங்களுக்கு ஏற்ப விலை உயர்வது இயல்பான ஒன்றே என்று கூறினார்.