
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் வடக்கே இன்று அதிகாலை 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாசிக் நகரத்திற்கு 89 கி.மீ. வடக்கில், தரைமட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதுவும் வெளியாகவில்லை.
