• Tue. Feb 24th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மீண்டும் கதாநாயகனாக ‘மைக்’ மோகன்!

தமிழ் சினிமாவில் 80-களில் ரசிகர்களை கவர்ந்த நடிகர்களில் முக்கியமானவர் மோகன். மைக் மோகன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர், குறுகிய காலத்தில் ஏராளமான படங்களில் நடித்து சாதனை படைத்தவர். ‘மூடு பனி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 2008-ஆம் ஆண்டு, ‘சுட்டப்பழம்’ என்கிற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு தெலங்கு குணசித்திர வேடத்தில் நடித்தார். தமிழை தவிர தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் கதாநாயகனாக மோகன் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கான தகவல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் இப்படத்தை, ‘தாதா 87’ படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஹரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான லுக்கில் இருக்கும் மோகனின் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.