நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் நடிப்பில் கடந்த சில வருடங்களாக உருவாகி வரும் அயலான் திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன், ஜதி ரத்னாலு பட இயக்குநர் அனு தீப் உடன் இணைவதாக, சிவகார்த்திகேயன் புத்தாண்டை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்! இந்தப் படத்தை அனு தீப் இயக்குகிறார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
இந்தப் படத்தை சுரேஷ் புரொடக்சன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ், சாந்தி டாக்கீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். புதுச்சேரியை கதைக் களமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளது.