• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எம்.ஜி.ஆர் அவர்களின் 34ஆவது நினைவு நாளை மலர் தூவி, உறுதி மொழி எற்கப்படும் – அதிமுக அறிவிப்பு

Byமதி

Dec 20, 2021

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான இதய தெய்வம், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34ஆவது நினைவு தினம் வருகிறது 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, ‘எம்.ஜி.ஆர் அவர்களின் 34ஆவது நினைவு தினமான 24.12.2021 அன்று, வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்நிக்ச்சியில் பங்கேற்கும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு விதிமுறகளின்படி கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி, வட்டம் என
கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக உடன்பிறப்புகள்,. தங்களின் பகுதிகளில் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கழக செயலாளர்கள் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடக, தெலுங்கானா, மகாராஷ்டிரா,
புதுடெல்லி, மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் எம்.ஜி.ஆர் அவர்களின் 34ஆவது நினைவு தினமான 24ஆம் தேதி அன்று எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.’

என அறிக்கை தெரியப்படுத்தியுள்ளனர் .