திரையுலகில் கொரோனா பாதிப்பு பிரபல நடிகர், நடிகைகளுக்கு ஏற்பட்டு வருகிறது தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், வடிவேலு, இயக்குனர் சுராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது நடிகைகாத்ரினா கைப் திருமணத்திற்கு சென்றுவந்த சில நடிகைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
தற்போதுதயாரிப்பாளர் போனி கபூரின் மகன் நடிகர் அர்ஜூன் கபூர். இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் அதேபோன்று இப்போது மீண்டும் போனி கபூர் குடும்பத்தை கொரோனா தாக்கி உள்ளது.அர்ஜூன் கபூருக்கும், அவரது சகோதரி அன்ஷூலா கபூருக்கும் திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.
பரிசோதனை செய்ததில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதோடு அர்ஜூன் கபூர் உறவினரும், தயாரிப்பாளருமான ரியா கபூர், அவரது கணவர் கரண் பூலானி ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மும்பையில் உள்ள அர்ஜூன் கபூர் வீட்டை மும்பை சுகாதாரத்துறை சீல் வைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டல்களிலும், தனி வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் டோங்கா டோங்கி படத்தின் மூலம் ஹீரோவானர். அதன்பிறகு பல படங்களில் நடித்தார். ஆக்க்ஷன் ஹீரோவாக வளர்ந்து வருகிறார்.மனோஜ் மஞ்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது: எனக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் என்னைச் சந்தித்த அனைவரும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும். என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆசீர்வாதத்துடன் நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.