• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி ஒரே குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..,

ByKalamegam Viswanathan

Jul 20, 2026

மதுரை மாவட்டம் காடுபட்டி காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் நில அளவை பணியின் போது எதிர்தரப்பினரை தாக்கி மரங்களை அழித்து சேதப்படுத்தியதாக தங்கள் குடும்பத்தினர் மீது காடுபட்டி காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக காவல்நிலையத்தில் கேட்டபோது எங்களை குற்றவாளிகள் என கூறி காவல்துறையினர் இழிவாக பேசுவதாகவும் கூறி தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் காடுபட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி, காமாட்சி, வினோத் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.

இது தொடர்பாக பேசிய மனுதாரர்களான : நில அளவை பணியின் போது சர்வேயருடன் சென்றோம் ஆனால் நாங்கள் எதிர்தரப்பினரை தாக்கியதாகவும், மரங்களை சேதப்படுத்தியதாகவும் கூறி எங்கள் குடும்பத்தினர் மீது காடுபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எங்களிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை, ஆனால் எங்கள் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்தரப்பு புகார் மீது நடவடிக்கைகள் எடுத்து எங்கள் குடும்பத்தினர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்