

போலீசார் தன்னை தற்கொலைக்குத் தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் கதறலுடன் கூறினார்.
நடிகையும் மீரா மிதுன் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ம் தேதி தமிழக போலீஸ் கைது செய்யப்பட்டனர். பின்னர் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், இருவரையும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக, நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்,
குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில், எழும்பூர் 14 வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்று ஆஜரானார்.
அப்போது அவர் மாஜிஸ்திரேட் பாலசுப்பிரமண்யன் முன் கதறினார். போலீசார் தன் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக அவர் கூறினார். எழும்பூர் போலீசார், இந்த வழக்குகள் குறித்து முறையாக தனக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் தன் சார்பாக வாதாட வழக்கறிஞர் வரவில்லை எனவும் குற்றம் சாட்டினார். பின்னர் சிறிது நேரம் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

