பிரபல தொழிலதிபர் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் உடல்நிலை குறைவால் மரணம்
பண்பாட்டுப் பெருமகன் கரைபடாத கல்வியாளர் கருமுத்து தி. கண்ணன் ( 70) கலைத் தந்தையின் பெயர் சொல்லும் பிள்ளை, தென்தமிழகத்தின் தொழில் துறை முன்னோடி, பேச்சிலும் நிர்வாகத்திலும் தனிப் பெரும் பேராற்றல் மிக்க, கண்ணியமும் நேர்மையும் மிக்க கல்வியாளர், மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர், தென்னகத்தில் முறையாகப் பொருள் ஈட்டி அதிக அளவில் வருமான வரி செலுத்தும் அப்பழுக்கற்ற தொழில் அதிபர், கருமுத்து தி. கண்ணன் இன்று காலை 4-50 “மணியளவில் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.இது மிகப் பெரிய பேரிழப்பு.அவர்களது இறுதிச்சடங்கு நாளை பகல் 2 மணிக்கு அவர்களது கோச்சடை இல்லத்தில் நடைபெறுகிறது.