• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ByA.Tamilselvan

May 23, 2023

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் புறப்பட்டுச்சென்றார்.
சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடா லேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களை சந்திக்கிறார் முதலமைச்சர்.சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார்.சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்.சிங்கப்பூரை தொடர்ந்து ஜப்பானின் ஒசாகா நகரில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஜப்பானில் உள்ள முக்கிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்திக்கும் முதலமைச்சர், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். தற்போது சிங்கப்பூர் புறப்பட்டுசென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் வழிஅனுப்பி வைத்தனர்.