• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை ரயில்வே மருத்துவமனையில் காலியிடங்களில் பூர்த்தி செய்ய வேண்டும்

Byகுமார்

Jun 28, 2022

மதுரை ரயில்வே மருத்துவமனையில் மருத்துவ காலியிடங்களில் பூர்த்தி செய்ய வேண்டும் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் டி ஆர் இ யூ ரயில்வே தொழிற்சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை ரயில்வே மருத்துவமனையில் தற்போது 3 டாக்டர்கள் விருப்ப ஓய்வு பெற்று விட்டனர் மதுரை கோட்டத்தில் உள்ள 9 மருத்துவமனைகளில் 4 மையங்களில் மானாமதுரை காரைக்குடி தூத்துக்குடி மற்றும் பழனி ஆகிய ஊர்களில் மருத்துவர்கள் இல்லாமல் அந்தந்த பகுதியில் வாழும் ரயில்வே ஊழியர்கள் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் மற்றும் அவர்களது குடும்பத்தார் தரமான மருந்து சிகிச்சை கிடைக்காமல் அவதிக்குள்ளனர்கின்றனர்
உயர்கல்வி பயின்று திரும்பிய மதுரை கோட்டத்தைச் சேர்ந்த இரு டாக்டர்களும் திருவனந்தபுரம் அரக்கோணத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர் ஆகவே மதுரை தலைமை மருத்துவர் போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து மருத்துவக் காலியிடங்களின் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் ..இரத்த பரிசோதனை மையத்தில் இரண்டு லேப் டெக்னீசியன்கள் காலியாக உள்ளன மருந்தாளுநர்கள் பதவிகள் இரண்டு காலியாக உள்ளன .ரயில்வே வாரிய உத்தரவின்படி டிஜிட்டல் மயமாக்கம் என்ற பெயரில் அனைத்து நடவடிக்கைகளும் கணினி பதிவு செய்ய வேண்டும் இதனால் அவர்களின் வேலைப் பளு அதிகரித்து உள்ளது .
தூய்மைப் பணியை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் செய்ய வேண்டும் தலைமை மருத்துவர் அலுவகத்தில் காலியாக உள்ள 3 கிளார்க் பதவிகளை பூர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ரயில்வே மருத்துவமனை முன்பு டி ஆர் இ யு மற்றும் சி ஐ டி யு ரயில்வே தொழிற்சங்க சார்பில் அதன் கோட்ட இணைச் செயலாளர் சங்கர நாராயணன் அவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ரயில்வே தொழிற்சங்க அனைத்து நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் மருத்துவமனைக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.