
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மாயூரநாதசுவாமி, அஞ்சல் நாயகி அம்பாள் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மாயூரநாதசுவாமி கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த ஜூன்.30–ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் 7- ஆம் திருநாளாவை முன்னிட்டு மாலையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை சிறப்பு பூஜை நடைபெற்றது.
மாயூரநாதசுவாமி, அஞ்சல் நாயகி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.விழாவில் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாள் தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை மண்டகபடிதாரர் சண்முகம் பிள்ளை வகையறாவினர் செய்திருந்தனர்.
