
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பணியாற்றகூடிய காவலர்களுக்கு
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது சம்பந்தமாகவும் மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது .

யோகா பயிற்சி இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பஷீனாபிவி தலைமையில் இராஜபாளையம் வடக்கு தெற்கு காவல் நிலைய மகளிர் காவல் நிலையம் போக்குவரத்து காவல்துறை. தளவாய்புரம் சேர்த்து கிழராஜகுலராமன் உள்ளிட்ட இராஜபாளையம் உட் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து காவலர்களுக்கும் பணி சுமையின்போது காவலர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதால் பல்வேறு பிரச்சனைகள் ஆளாகின்றனர்.

ஆகையால் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாகவும் மனதை ஒருநிலைப்படுத்தும் விதத்திலும் இந்த யோகா பயிற்சி நடைபெற்றது .காவலர்களுக்கு யோகா பயிற்சியை பிரம்ம குமாரி இயக்கத்தில் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இராஜபாளையம் உட்ட கோட்டத்திற்கு உட்பட்ட 110 க்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்
