• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

மாயூரநாத சுவாமி திருக்கோவில் திருக்கல்யாணம் மற்றும் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்..,

ByRadhakrishnan Thangaraj

Jun 28, 2026

இராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட பெத்தவநல்லூர் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருக்கல்யாணம் மற்றும் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆனிப் பெருந்திருவிழா கடந்த ஜூன். 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் ஆனி பெருந்திருவிழாவில் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் 7–ம் நாள் விழா (26.06.2026 ) இரவு அஞ்சல் நாயகி, மாயூரநாதசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆனிப் பெருந்திருவிழா தேரோட்ட விழாவை முன்னிட்டு காலையில் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருள தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.