• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

காலி இருக்கைகள் முன்பு குறைதீர்க்கும் முகாம் நடத்திய மதுரை மேயர்

ByA.Tamilselvan

Jun 14, 2022

மதுரையில் மேயர் தலைமையில் மாநகராட்சி சார்பில் சிறப்பு குறைதீர் முகாம் – மனு கொடுக்க ஆட்கள் இல்லாமல் காலி இருக்கையாக காணப்பட்டது
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் மனு முகாம் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் பாதாளசாக்கடை, சாலை வசதி, குடிநீர் தொடர்பான மனுக்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை வடக்கு பகுதியில் உள்ள கோரிப்பாளையம், நரிமேடு புதூர் மற்றும் பீபிகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களோடு சேர்ந்த கவுன்சிலர்களும் வருகை தந்து துப்புரவு பணிகளை செய்யும் பணியாளர்கள் அதிகரிப்பு வார்டு தேவைகள் தொடர்பாகவும் மனுக்களை அளித்தனர்.


மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் உள்ள பகுதிகளைப் பொறுத்தவரை பொதுமக்கள் அதிகமாக வசிக்க கூடிய பகுதிகளாக உள்ளது. இருந்தபோதிலும் மதுரை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு முகாமுக்கு பொதுமக்கள் யாரும் தங்கள் மனுக்களை கொண்டு கொடுக்க முன்வராத நிலை ஏற்பட்டது. இந்த செயல் மதுரை மாநகராட்சியில் தற்போது உள்ள நிலையை குறிப்பிட்டுக் காட்டுகிறது என்று கூறலாம்.