விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அரசு மேல்நிைலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. சிவகாசி இந்து நாடார் விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ்பிரியா, மாநகராட்சி பள்ளி கல்விக்குழு தலைவர் ஸ்ரீநிகா, மாமன்ற உறுப்பினர் சசிகலா மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.