• Tue. Dec 10th, 2024

ஒளி தரும் தீபாவளியாக அமையட்டும்- கவர்னர் தமிழிசை வாழ்த்து

ByA.Tamilselvan

Oct 23, 2022

நாளை தீபாவளி திருநாளை முன்னிட்டு புதுவை கவர்னர் தமிழிசை தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழிசை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் …தமிழகம், புதுவை, தெலுங்கானா மற்றும் அனைத்து இந்திய சகோதர-சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தீபாவளி மகிழ்ச்சியின் வரிசையாகவும், வரிந்துகட்டி வரும் துன்பங்கள் வரிசையாக நாம் வைக்கும் ஒளியில் மறைந்து ஓடவும். 2 ஆண்டுகளுக்குப்பிறகு ஊசி பட்டாசு கொளுத்தி உவகையுடன் கொண்டாட வைத்து கொரோனா எனும் கொடிய நோயை ஒழித்த தடுப்பூசியை நம் நாட்டிலேயே தயாரித்து நாட்டிற்கு அர்பணித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து நாம் வாங்கும் விளக்குகள், புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் பரிசுப்பொருள்கள் அனைத்தும் நம் மண்ணின் மைந்தர்கள் உழைப்பில் உருவாகும் பொருட்களை வாங்கினால் இந்தியர் அனைவரின் வாழ்வும் ஒளிரும் என்ற பாரதப் பிரதமரின் வரிகளை நினைவு கூர்ந்து நாம் வாங்கும் பொருட்கள் எளிமையான எளியோரின் கொண்டாட்டங்களாகவும் மாறி அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்றும் தீபாவளியாக மலரட்டும். சுய சார்பான இந்தியாவை படைக்க ஒளி தரும் தீபாவளியாக இந்த தீபாவளி அமையட்டும். பட்டாசுகளை எப்போதும் போல் வெடித்து நம் பராம்பரிய தீபாவளி திருநாளை கொண்டாடி சிவகாசியில் பணியுரியும் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம். தீபாவளி திருநாளன்று நம் பராம்பரிய தன்வந்திரி பிரசாதமாம் “தீபாவளி மருந்தான” திரிகடுகு சுக்கு, மிளகு, திப்பிலி உண்டு நம் உடல் நலம் காப்போம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.